அரசியல் தமிழகம்

உதயநிதிஸ்டாலினுக்கு திமுக-வில் முக்கிய பொறுப்பு! வியப்பில் கழகத்தினர்!

Summary:

dmk gave a posting to udayanithi stalin


நடிகர் விஜய் நடித்த ‘குருவி’ படத்தை தயாரித்ததன் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் உதயநிதி ஸ்டாலின். மேலும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். மேலும் பல படங்களில் ஹீரோவாக நடித்தும், பல படங்களை தயாரித்தும் வருகிறார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு செயல் தலைவராக இருந்த முக.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் ஆனார். ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரத்தில் அதிகம் தீவிரம் காட்டி வந்தார். மேலும் அப்போது நடைபெற்ற பிரச்சாரங்கள் அனைத்திலும் உதயநிதி, நான் பொறுப்புகள் ஏற்க வரவில்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டும் செயல்படுவேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்,தற்போது திமுக-வின் இளைஞர் அணி செயலாளராக இருந்த மு.பே.சாமிநாதன் அவரது பதவியை ராஜினாமா செய்து. அடுத்த செயலாளர் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அந்த கழகம் வெளியிட்டுள்ளது.


Advertisement