உறுதியானது திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு! காங்கிரசுக்கு எத்தனை சீட்டுகள் தெரியுமா?

உறுதியானது திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு! காங்கிரசுக்கு எத்தனை சீட்டுகள் தெரியுமா?


dmk-and-congress-sheet-sharing-2019-election

2019 நாடாளுமன்ற தேர்தல் வர இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் அணைத்து கட்சிகளும் தங்கள் தோழமை கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று நடந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் எடப்பாடி தலைமயிலான அதிமுக அணியும், ராமதாசு தலைமையிலான பாமக அணியும் கூட்டணி சேர்ந்தது.

அதனை தொடர்ந்து இந்த கூட்டணியுடன் ஆளும் கட்சியான பாஜக கூட்டணி சேர்ந்தது. இந்த கூட்டணியுடன் விஜகாந்த்தின் தேமுதிக கட்சியும் கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேமுதிக கூட்டணி இன்னும் இழுபறியாகவே உள்ளது.

Election 2019

இந்நிலையில் அ.தி.மு.க.வை  தொடர்ந்து, தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிக்க இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் இன்று நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக, காங்கிரஸ் இடையே சுமூகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய கட்சியான காங்கிரசிற்கு 10 இடங்களை ஒதுக்கியுள்ளது திமுக.

Election 2019

தமிழகத்தில் மொத்தம் ஒன்பது தொகுதிகளும், பாண்டிசேரியும் சேர்த்து மொத்தம் 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிடப்போகும் தொகுதிகள் குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.