அதிரடி சரவெடி.. வினோஜ் செல்வம் தலைமையில் அதிமுக, தேமுதிக புள்ளிகள் பாஜகவில் இணைவு.!
எதிர்வரும் மக்களவை பொதுத்தேர்தல் அரசியலில் பரபரப்பை உண்டாக்கி இருக்கும் நிலையில், அதிமுக மற்றும் தேமுதிக கட்சியினருக்கு எதிர்ச்சி தரும் வகையில், அக்கட்சியை சேர்ந்தோர் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
2024 பாராளுமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கடந்த 2014, 2019 ஆம் ஆண்டுகளில் ஆளுங்கட்ச்சியாக தொடர்ந்து இரண்டு முறை தேர்வு செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, தன்னை மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அக்கட்சியின் சார்பில் மாநில வாரியாக தேர்தல் பிரச்சாரங்கள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களை வரவேற்று, அதனால் பயன்பெற்று வரும் மக்கள் தொடர்ந்து தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து வருகின்றனர். மாற்று கட்சியைச் சார்ந்தவர்களும் பிரதமர் மோடியின் மீதான அன்பால் அக்கட்சியில் இணைவது அடுத்தடுத்து நடந்து வருகிறது.

இது தமிழகத்தை பொறுத்தமட்டில் பாஜகவிற்கு மிகப்பெரிய வரவேற்பை உருவாகியுள்ளது. இந்நிலையில், இன்று பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் தலைமையில் துறைமுகம் தொகுதியில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேமுதிக மற்றும் அதிமுக கட்சியைச் சார்ந்த பலரும் தங்களை பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அதன்படி, துறைமுகம் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஆர்.லோகேஷ், விஜய அசோகன், சீனு, வேலு, அன்பழகன் உட்பட பலரும் அதிமுக கழகத்திலிருந்து தங்களை விடுவித்து பாஜகவில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அதேபோல, தேமுதிக கட்சியைச் சார்ந்த விமல் ராஜ், மோகன், விக்னேஷ், சதீஷ் உட்பட பலரும் தேமுதிகவில் இருந்து விலகி தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.