தண்ணீர் பாய்ச்சும் தகராறில் பெண் சுத்தியால் அடித்துக்கொலை.. ஆத்திரத்தில் அரங்கேறிய வெறிச்செயல்.!



Dharmapuri Woman Beaten to Death with Hammer Over Farm Water Dispute

நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக எழுந்த பிரச்சனையில் பெண் கொல்லப்பட்டார்.

விவசாய நிலம்:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பொப்பிடி கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரின் மனைவி தனலட்சுமி (வயது 40). தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது.

இதையும் படிங்க: நெஞ்சு, தலையில் அடித்து கொடூர கொலை.. தந்தைக்கு மகன் செய்த படுபாதகம்.. துடிதுடிக்க பறிபோன உயிர்.!

பிரச்சனை:

வெங்கடேசனின் சகோதரர் மாரிமுத்துவின் மகன் செந்தில் அரசு (வயது 28), செண்டரிங் வேலைகளை செய்து வருகிறார். இவருக்கும் - வெங்கடேசனுக்கு விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்னீர் பாய்ச்சுவது தொடர்பாக அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

Dharmapuri

சுத்தியால் தாக்குதல்:

இதனிடையே, நேற்று மாலை நேரத்தில் மீண்டும் இதுதொடர்பாக இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தனலட்சுமியிடம் வாக்குவாதம் செய்த செந்தில் அரசு, ஆத்திரத்தில் இரும்பு சுத்தியால் தனலட்சுமியின் தலையில் பலமாக தாக்கி இருக்கிறார்.

பெண் மரணம்:

இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பெண்ணை மீட்ட குடும்பத்தினர், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் தனலட்சுமி வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. 

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி காவல்துறையினர், தலைமறைவான செந்தில் அரசுக்கு வலைவீசி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: விவசாயியை வெட்டிக்கொன்ற சகோதரர்கள்.. அரங்கேறிய பயங்கரத்துக்கு காரணம் என்ன? சேலத்தில் கொடூரம்..!