ஏழு மாத கருவை கலைக்க முயன்ற பெண்மணி.! விபரீதத்தால் வந்த வினை.! அதிர்ச்சி காரணம்.!Death of a woman who ate a pill to terminate a pregnancy

7 மாத கர்ப்பத்தைக் கலைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கொரட்டூர், தந்தை பெரியார் நகர் பகுதியில் வசித்து பிரதாப் உள்கா. இவரது மனைவி குமாரி கஞ்சக்கா (வயது 23). இந்த தம்பதி ஒடிசாவை சேர்ந்தவர்கள். பிரதாப், சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது குமாரி, 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். 

கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் உள்ள குமாரியின் அண்ணி பிரசவத்தின் போது இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அந்த இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதாப் உள்கா- குமாரி கஞ்சக்கா தம்பதியினர் ஒடிசா சென்றுள்ளனர். அப்போது இதுபோல தானும் குழந்தை பிறக்கும் போது இறந்து விடுவோமோ என்று அஞ்சிய குமாரி, தனது வயிற்றில் வளர்ந்து வரும் கருவைக் கலைக்க முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து கருக்கலைப்புக்கான நாட்டு மருத்தை வாங்கி சாப்பிட்டுள்ளார். நாட்டு மருந்து சாப்பிட்டதில் இருந்தே குமாரிக்கு அவ்வப்போது உடல் நலக்கோளாறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால் அதை கணவரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்தநிலையில் குமாரிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்ப பையில் பாதிப்பு உள்ளதாக கூறி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் அவருக்கு கர்ப்பபை அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் குமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தனது அண்ணியை போல் பிரசவத்தின்போது இறந்து விடுவமோ? என பயந்து, தனது கர்ப்பத்தை கலைக்க குமாரி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது.