"எமனாக மாறிய சிடி ஸ்கேன்..." இளம் வழக்கறிஞர் பரிதாப பலி.!!



young-brazil-lawyer-died-while-undergo-ct-scan-shocking

பிரேசில் நாட்டில் சிறுநீரக கல் பிரச்சனைக்காக சிடி ஸ்கேன் எடுக்கச் சென்ற இளம் வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மருத்துவ குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் லெட்டிசியா பவுல். சமீபத்தில் வழக்கறிஞருக்கான பட்டப் படிப்பை முடித்த இவர் முதுகலை வணிகம் மற்றும் சட்ட படிப்பில் சேர்ந்து பயின்று வந்திருக்கிறார். இந்நிலையில் சிறுநீரக கல் பிரச்சனையால் அவதியுற்ற அவர் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக பிரேசில் நாட்டின் சாண்டா காட்ரினா நகரிலுள்ள மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

world

சிடி ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கு முன்பு அவருக்கு அயோடின் கலந்த கான்ட்ராஸ்ட் டை மருந்தை ஊசி மூலம் செலுத்தி இருக்கிறார்கள். இந்த மருந்து அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யும் போது பவுலுக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மயக்கமடைந்த அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கனவாய் போன வெளிநாட்டு வேலை.. கழுத்தை நெரித்த கடன் தொல்லை.!! வாலிபரின் சோக முடிவு.!!

ஒரு நாள் முழுவதும் அவசர சிகிச்சை பிரிவிலிருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிடி ஸ்கேன் பரிசோதனையின் போது இளம் வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து பிரேசில் நாட்டு காவல் துறையும் மருத்துவ குழுவினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அட பாவமே... பீடி துண்டால் பறி போன உயிர்.!! முதியவருக்கு நேர்ந்த சோக முடிவு.!!