நானே ராஜா, நானே மந்திரி.. ரவி மோகனின் அடுத்தடுத்த முடிவுகள்.. SJ சூர்யாவும், யோகிபாபுவும் கை கொடுப்பார்களா.?! 



ravi mohan new movies in his new era

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ரவி மோகன் ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர் தற்போது கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். 

அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும், சுதா ரங்கரா இயக்கும் 'பராசக்தி' திரைப்படத்தில் வில்லனாக நடிக்கின்றார். இதனைத் தொடர்ந்து கார்த்தி யோகி இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து ப்ரோ கோட் படத்தில் நடிக்கிறார்.

Ravi Mohan

இந்த படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், அவர் ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை துவங்கினார். ரவியின்' 'ப்ரோ கோட்' திரைப்படத்தை இந்த நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. 

இதையும் படிங்க: அட.. வேற லெவல்தான்.! சிவகார்த்திகேயனின் 25வது பட டைட்டில் இதுவா.! வெளிவந்த தகவல்!!

அடுத்ததாக யோகி பாபுவின், An ordinary man திரைப்படமும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரிக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்தை ரவி மோகனே இயக்க இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: பல நடிகர்கள் அரசியல்வாதியாக.. நான் இதையே விரும்புகிறேன்.! திமுக மேடையில் நடிகர் ரவி மோகன் பேச்சு!!