மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
அட.. வேற லெவல்தான்.! சிவகார்த்திகேயனின் 25வது பட டைட்டில் இதுவா.! வெளிவந்த தகவல்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்குரா இயக்கத்தில் தனது 25வது படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தை Dawn Pictures சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், மிகப்பெரும் பட்சத்தில் உருவாகும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சிவகார்த்திகேயனின் 25 வது படத்திற்கு 'பராசக்தி' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதன் அறிவிப்பு பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக விவகாரம்; மனம்திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்.! பேசியது என்ன?
இதையும் படிங்க: சிம்பு ரசிகர்களே ரெடியா.? STR பிறந்த நாளில்.. டபுள் கொண்டாட்டம்.. வெளியாகவுள்ள 2 காதல் காவியங்கள்.!