மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
சிம்பு ரசிகர்களே ரெடியா.? STR பிறந்த நாளில்.. டபுள் கொண்டாட்டம்.. வெளியாகவுள்ள 2 காதல் காவியங்கள்.!

குழந்தை நட்சத்திரம்
குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் உறவை காத்த கிளி திரைப்படம் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் சிம்பு. இவர் காதல் அழிவதில்லை திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். டி ராஜேந்தர் உதவியுடன் அவர் நிறைய படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் அவருக்கு கோவில், அலை, தம், குத்து உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
புகழை கொடுத்த மன்மதன்
கடந்த 2004 இல் சிம்பு நடித்த மன்மதன் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் முன்னணி நடிகராக வலம் வர துவங்கினார். தொட்டி ஜெயா திரைப்படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் அமைந்தன. கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அவர் ஒரு ரொமான்டிக் ஹீரோவாக நடித்து ரசிகைகளின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார்.
இதையும் படிங்க: நடிகை வேதிகாவின் Fear படம் ஓடிடியில் வெளியீடு.. கிரைம் திரில்லரில் அதிரவைக்கும் காட்சிகள்.!
வாழ்வை தொலைத்தார்
தற்போது வரை காதலர்களால் கொண்டாடப்படும் படமாக அது இருந்து வருகிறது. அதற்குப்பின் ஒஸ்தி, வானம், போடா போடி போன்ற படங்களில் அவர் நடித்தார். ஆனால், அவை எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. அதன் பின் சிம்பு பர்சனல் காரணங்களால் பட வாய்ப்புகளை இழந்து பல்வேறு பிரச்சினைகளில் சிக்கினார். பின்னர் வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். தற்போது அவர் தக் லைப் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
பர்த்டே சர்ப்ரைஸ்
இந்த நிலையில், வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த பழைய திரைப்படங்களான வல்லவன் மற்றும் மன்மதன் உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது சிம்புவின் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: நச்சென்ற கவர்ச்சி காட்டிய அஞ்சலி.. பிரமிக்க வைக்கும் புகைப்படத்தால்.. உற்சாகமான ரசிகர்கள்.!