நடிகை வேதிகாவின் Fear படம் ஓடிடியில் வெளியீடு.. கிரைம் திரில்லரில் அதிரவைக்கும் காட்சிகள்.! 



Actress Vedhika Starring on Fear On Amazon Prime 

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை வேதிகா, தற்போது தெலுங்கில் வெளியாகும் படங்கள், ஓடிடி தொடர்களில் நடித்து வருகிறார். 

கடந்த 2006ல் வெளியான மாதரசி, முனி ஆகிய படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி, பின் தெலுங்குக்கு சென்றார். அதனைத்தொடர்ந்து, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் இவர் நடித்து இருந்தார். 

இதையும் படிங்க: பழனி வரும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்; பாதையாத்திரை பாடல் நாளை வெளியீடு.!

சமீபத்தில் சிவலிங்கா, காஞ்சனா 3, பேட்ட ராப் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்திருந்தார். கடந்த 14 டிசம்பர் 2024 அன்று வேதிகா, அரவிந்த் கிருஷ்ணா, ஜெயப்ரகாஷ் உட்பட பலர் நடிக்க, ஹரிதா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பியர் (Fear). 

பெண் ஒருவர் இளம் வயதில் எதிர்கொள்ளும் பிரச்சனை மற்றும் அவளின் திகில் உண்மைகளை அடிப்படையாக கொண்டு வெளியான படம் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தின் மீதான வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது படம் அமேசான் ஓடிடி பக்கத்திலும் வெளியாகி இருக்கிறது. 

இதையும் படிங்க: மிஷ்கினின் சர்ச்சை பேச்சு.. நடிகர் அருள்தாஸ் கண்டனம்.!