பழனி வரும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்; பாதையாத்திரை பாடல் நாளை வெளியீடு.!



paathayathirai song will be out by tomorrow

 

பாதையாத்திரை பக்தர்களை ஊக்கப்படுத்த பக்தி பாடல் வெளியிடப்படுகிறது.

தாய் - தந்தையிடம் கோபித்துக்கொண்டு, பூவுலகுக்கு வந்த முருகன், பழனி மலைமீது குடிகொண்ட நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. 2025ம் ஆண்டு தைப்பூச பண்டிகைக்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். 

இதையும் படிங்க: மிஷ்கினின் சர்ச்சை பேச்சு.. நடிகர் அருள்தாஸ் கண்டனம்.! 

48 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள், பல வகையிலான வேண்டுதலுடன் காவடி சுமந்து பழனி நோக்கி தைப்பூசம் அன்று வருவது வழக்கம். பக்தர்களின் வருகையை யொட்டி சிறப்பு பேருந்துகள், ரயில்களும் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை நகர்களில் இருந்து இயக்கப்படுகிறது.  

இதனிடையே, பழனி கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பக்தி பாடல் ஒன்று நாளை வெளியாகிறது. நாளை மாலை 06:03 மங்கு, பாதையாத்திரை என்ற தலைப்பில் வெளியாகும் பாடலுக்கு இசையை அல் ரூபியான் மேற்கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: வல்லான் திரைப்படத்துக்கு யுஏ சான்றிதழ்; தணிக்கைக்குழு அறிவிப்பு.!