"நரி சாயம் வெளுத்து போச்சு..." நடிகர் விஜய்யை கிண்டல் செய்த அமைச்சர் சேகர்பாபு.!!



dont-want-to-waste-our-time-by-speaking-about-vijay-sek

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்தக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் விஜய், முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேசிய கருத்துக்கள் அனைவரிடமும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது பேச்சுக்கு பல அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனத்தையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடிகர் விஜய் பேச்சு குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசின் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பாக கட்டப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கண்காட்சி மையத்தின் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுரை மாநாட்டில் முதலமைச்சர் குறித்து விஜய் பேசியது பற்றி அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, நரியின் சாயம் வெளுத்து விட்டது என கிண்டலாக கூறினார்.

TN politics

மேலும் தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 3 மாநாடுகளை விஜய் நடத்தினால் அவரது கட்சி காலி பெருங்காய டப்பாவாக மாறிவிடும் எனவும் குறிப்பிட்டார். முதலமைச்சரை சிறுபிள்ளைத்தனமாக கிண்டல் செய்கிறார்கள். ஆனால் முதலமைச்சரின் புகழ் இமயமலை அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. பச்சிளம் குழந்தைகளின் பசிப்போக்கும் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இன்று பஞ்சாப் மாநில முதல்வரும் இதே திட்டத்தை தனது மாநிலத்தில் செயல்படுத்த முடிவு செய்திருக்கிறார். தமிழக முதல்வர் ஒன்றியத்திற்கு மட்டுமில்லாமல் உலகிற்கே முன்மாதிரி முதல்வராக செயல்பட்டு வருகிறார் என கூறினார்.

இதையும் படிங்க: "கொடி கம்பமே நட தெரியல நீங்க அடுத்த முதல்வரா..." நடிகர் விஜய்க்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி.!!

மேலும் அரசியல் அனுபவமில்லாத விஜய் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லி எங்களுடைய காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் முதல்வரின் பலம் என்ன என்பதை அவர்களே அறிந்து கொள்வார்கள். திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஸ்டாலின் முதல்வராக வருவார் என சேகர் பாபு தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஓட்டுக்காக கேப்டனை பயன்படுத்தும் விஜய்.." சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்.!!