"கொடி கம்பமே நட தெரியல நீங்க அடுத்த முதல்வரா..." நடிகர் விஜய்க்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி.!!



vijay-cannot-become-cm-bjp-win-next-election-ex-governo

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பேசிய அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், மிஸ்டர் பி.எம் என பிரதமர் மோடியை குறிப்பிட்டு பேசியது பல்வேறு விமர்சனங்களை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து பேசிய பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் நீங்கள் மிஸ்டர் பி.எம் என குறிப்பிடும் அவர்தான் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை ஒளிரச் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் ஒரு நடிகையின் கல்யாணத்திற்கு தனி விமானத்தில் சென்றீர்களே அது போன்று பல விமான நிலையங்களை உலக தரத்திற்கு உயர்த்தியவர் தான் பிரதமர் மோடி. நீங்கள் அரசியலுக்கு புதியவர். உங்களால் பலம் பொருந்திய பாஜகவை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

TN politics

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஒரு கட்சியின் மாநில மாநாட்டில் கொடி கம்பத்தை சரியாக நட முடியாத நீங்கள் எப்படி அடுத்த முதல்வராக வரவேண்டும் என்று கனவு காண்கிறீர்கள்.? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். யாரோ வசனம் எழுதிக் கொடுத்ததை சினிமாவில் பேசுவது போல் பேசுகிறீர்கள். உங்களது அரசியல் ஞானம் அவ்வளவுதான் எனவும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். மேலும் பாஜக பொருந்தும் கூட்டணியா.? இல்லை பொருந்தாத கூட்டணியா.? என்பதை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காண்பீர்கள் எனவும் அவர் விஜய்க்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: "சினிமா வசனம் பேசி ஆட்சியைப் பிடிக்க முடியாது..." தவெக-வுடன் கூட்டணி இல்லை.!! இபிஎஸ் அதிரடி பதில்.!!

2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், வர இருக்கின்ற தேர்தலில் தமிழகத்தில் தாமரை மலரத்தான் போகிறது. என்பதை தம்பி விஜய் காண போகிறார் எனவும் தெரிவித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: "திமுக கனவு பலிக்காது; இனிமே நாங்க தான்..." நெல்லையில் அமித்ஷா சூளுரை.!!