தமிழகம்

புதுக்கோட்டையில் பெற்ற மகளை நரபலி கொடுத்த தந்தை! வெளியான அதிர்ச்சி காரணம்!

Summary:

Dad killed his daughter

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் என்பவரது மகள் வித்யா. 13 வயதாகும் இந்த சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் வீட்டில் இருந்து வந்துள்ளார் சிறுமி.

இந்நிலையில், கடந்த மே 18ஆம் தேதி வித்யா அவரது சகோதரியுடன் அருகில் உள்ள பிடாரி கோவில் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றார். வெகுநேரமாகக் சிறுமியை காணாததால் பெற்றோரும் உறவினர்களும் வித்யாவை தேடினர். 

அப்போது பாப்பான்குளம் அருகே தைலமரக்காட்டு பகுதியில் வித்யா, ஆடைகள் களைந்து, முகத்தில் பலத்த காயத்துடன், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் அலங்கோலமான நிலையில் கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிய வித்யாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து இவ்வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்ததாக தந்தை பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். 

மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமாரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர். மூடநம்பிக்கைக்காக பெற்ற மகளை நரபலி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


Advertisement