அடப்பாவமே... 5 மாத குழந்தையை அடித்தே கொன்ற தந்தை.!! விசாரணையில் வெளிவந்த உண்மை.!!dad-brutally-killed-his-five-month-old-daghter-shocking

நீலகிரி மாவட்டத்தில் தந்தையே 5 மாத பெண் குழந்தையை கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தையான பிரேம் என்பவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேம் - ரம்யா தம்பதி

நீலகிரி மாவட்டம் ஓல்டு ஊட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கேத்தரின் ஏஞ்சல் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

tamilnadu

கொரியரில் வேலை

பிரேம் தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலை 7 மணிக்கு பணிக்கு சென்று இரவு 9:00 மணிக்கு வீடு திரும்புவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் காலை 9 மணிக்கு வேலைக்கு சென்று இருக்கிறார் பிரேம்.

இதையும் படிங்க: திருச்சி: மத்திய சிறை ஊழியர் திடீர் மரணம்.!! காவல்துறை கண்ணீர் அஞ்சலி.!!

காயத்துடன் அசைவற்றுக் கிடந்த குழந்தை

துணி துவைத்துக் கொண்டிருந்த ரம்யா, பிரேம் வேலைக்கு சென்றதும் குழந்தையை பார்த்துள்ளார். அப்போது குழந்தை அசைவற்றுக் கிடந்திருக்கிறது. மேலும் குழந்தையின் கண்ணமும் சிவந்துள்ளது. இதனால் பதறிய ரம்யா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரேம்

இதனைத் தொடர்ந்து தனது குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக ரம்யா ஊட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் குழந்தையின் தந்தை பிரேமிடம் விசாரிக்கும் போது அவர் தனது மகளை அடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சில தினங்களாக குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருப்பது பிரேமுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பச்சிளம் குழந்தை என்றும் பார்க்காமல் அடித்திருக்கிறார்.

பரிதாபமாக உயிரிழந்த ஏஞ்சல்

இதே போல் நேற்று முன்தினமும் ரம்யா துணி துவைத்துக் கொண்டிருந்தபோது குழந்தை மீண்டும் தொடர்ந்த அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையை கடுமையாக தாக்கியதில் ரத்தக்கசிவு ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிர் இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேமை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு மனநல பாதிப்பு ஏதும் இருக்கிறதா.? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அடக்கொடுமையே... வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை.!! முன்னாள் ராணுவ வீரர் கைது.!!