அடக்கொடுமையே... வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை.!! முன்னாள் ராணுவ வீரர் கைது.!!ex-military-man-arrested-for-sexual-misbehaviour-with-h

தத்தெடுத்து வளர்த்த குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்தது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ராணுவ வீரர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே கொல்லம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் எட்வர்ட் துரை. 63 வயதான இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இருந்த ஒரு மகன் இறந்த நிலையில் தனிமையில் இருந்த எட்வர்ட் துரை அனாதை ஆசிரமத்தில் இருந்த 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

tamilnadu

வளர்ப்பு மகளுக்கு பாலியல் சீண்டல்

11 மற்றும் 12 வயதுடைய அந்தப் பெண் குழந்தைகளிடம் முன்னாள் ராணுவ வீரரான எட்வர்ட் ஆபாச படங்களை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இவரது பாலியல் கொடுமைகள் பொறுக்க முடியாத ஒரு குழந்தை இது தொடர்பாக நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: விரட்டிவிரட்டி காதலிக்கச்சொல்லி தொல்லை; போக்ஸோவில் கம்பி எண்ணும் இளைஞர்.!

கைது செய்யப்பட்ட எட்வர்ட் துரை

குழந்தையின் புகாரைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் இது தொடர்பாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் நேரில் வந்து விசாரணை செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரான எட்வர்ட் துரையை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வளர்ப்பு குழந்தைகளிடம் முன்னாள் ராணுவ வீரர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: இனி இவர்களுக்கும் ரூ 1000 மகளிர் உரிமை தொகை... யார் யாருக்கெல்லாம் தெரியுமா.?