மசாஜுக்கு ஒத்துழைக்காததால் கத்தி முனையில் கொடுமை.. சென்னையில் திடுக் சம்பவம்.!



Velachery Massage Centre Robbery Drunken Dispute Turns Violent, History-Sheeters Arrested in Chennai

சட்டப்படி இயங்கிய மசாஜ் சென்டரில் நடந்த தகராறு கொள்ளையாக மாறியது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதையில் மசாஜ்:

சென்னை வேளச்சேரி பகுதியில் முறையான அனுமதியுடன் செயல்பட்டு வந்த பிரபல மசாஜ் சென்டரில், கடந்த 7-ஆம் தேதி இரவு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது. சுமார் 7.30 மணியளவில் ஐந்து பேர் அந்த மசாஜ் சென்டருக்கு வந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் வழக்கம்போல் மசாஜ் செய்து கொண்ட நிலையில், ஒருவருக்கு அதிக மதுபோதை இருந்ததால் முதலில் பெண் ஊழியர்கள் மசாஜ் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அதிக பணம் தருவதாக அவர் கூறியதால் அந்த நபருக்கும் மசாஜ் செய்ய ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: "மொபைல் வாங்கி தரட்டுமா... உன் சைஸ் என்ன"...? 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.!! தனியார் கல்லூரி பேராசிரியர் கைது.!!

ஹேப்பி எண்டு கேட்டு தகராறு:

மசாஜ் முடிந்த பிறகு, அந்த போதை நபருக்கு 'ஹேப்பி எண்ட்' வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது கிடைக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த அவர், தன்னுடன் வந்த நான்கு நண்பர்களிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அந்த நண்பர்கள் மசாஜ் சென்டரில் பணியாற்றி வந்த தனலட்சுமி, ஷாலினி, பிரியங்கா ஆகிய மூன்று பெண் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கத்தி முனையில் மிரட்டல்:

வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், திடீரென கத்தியை காட்டி மிரட்டி, மூன்று பெண் ஊழியர்களிடமிருந்து சுமார் 10 கிராம் தங்க நகைகள் மற்றும் செல்போன்களை பறித்ததாக கூறப்படுகிறது. மேலும், சம்பவத்துக்கான ஆதாரங்களை அழிக்க முயன்றதாகக் கூறப்படும் அந்த கும்பல், மசாஜ் சென்டரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் டிவிஆர் மற்றும் மானிட்டரையும் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

chennai

ஐவர் கும்பல் இவர்கள்தான்:

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஐந்து குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த வீரமருது (35), அவரது கூட்டாளியான பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்ற பில்லி பவுல் (42), மேலும் 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற ராக்கப்பன் (48) உள்ளிட்டோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, வீரமருது, ஆனந்த்குமார் மற்றும் ரவிக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் தங்க நகைகள், 5 செல்போன்கள், 2 கத்திகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் இரண்டு பேர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க: "குடும்பம் நடத்த வரமாட்டியா... " சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரம்.!! பட்டப்பகலில் இளம் பெண் கொலை.!!