தமிழகம்

கர்ப்பிணி மகளை கடத்தி சென்று ஆசிட் வீசி நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்ற தந்தை!

Summary:

dad attacked pregnant daughter

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலாஜி, பாக்கியலட்சுமி தம்பதியரின் மகன் சாய்குமார் என்பவர் சென்னையில் தங்கி ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். அந்த சமயத்தில் தீபிகா என்கிற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததால் தீபிகாவின் தந்தை, விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் தலைமைக் காவலரான பாலகுமார், அங்கிருந்து வீட்டை காலி செய்து திருத்தணிக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் அங்கு தனியார் கல்லூரியில் படித்து வந்த தீபிகா கடந்த ஜூன் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி, பெங்களூருவில் சாய்குமாரை திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த சில மாதங்களில் சாய்குமார், தீபிகா இருவரும் வேப்பம்பட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்தனர். தற்போது தீபிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் சாய் குமார்வீட்டுக்கு தீபிகாவின் தந்தை பாலகுமார் வந்து அம்மாவின் உடல் நிலை சரி இல்லாததால் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கு தீபிகா தந்தையுடன் செல்ல மறுத்தார். அப்போது பலகுமாருடன் வந்த 4 பேர் வேகமாக தீபிகாவின் முகத்தில் ரசாயன பவுடர் கலந்த அமிலத்தை பூசியுள்ளனர். இதனை தடுக்க வந்த தீபிகாவின் மாமியார் பாக்கியலட்சுமி மற்றும் கர்ப்பிணியாக இருந்த மற்றொரு மருமகள் சந்தியா முகத்திலும் பூசியுள்ளனர்.

இதனையடுத்து தீபிகாவை அவர்கள் வந்த காரிலே கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதனையறிந்த பாலகுமார் தனது மகளை, வேப்பம்பட்டு மெயின்ரோட்டில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்தநிலையில் முகம் வெந்து மிகுந்த வலியால் துடித்த தீபிகா, பாக்யலட்சுமி, திவ்யா ஆகிய 3 பேரையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement