சென்னையை சூறையாடிய மாண்டஸ்!.. 2 நாளைக்கு மிரட்ட காத்திருக்கும் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையை சூறையாடிய மாண்டஸ்!.. 2 நாளைக்கு மிரட்ட காத்திருக்கும் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!


cyclone-mantus-ravaged-chennai

சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாகவும் பிற்பகுதி அடுத்த ஒரு மணி நேரத்திலும் கடந்ததாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடந்தது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மகாபலிபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. மாண்டஸ் புயல் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய மாண்டஸ், பிற்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. சென்னைக்கு தென்கிழக்கில் 30 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நகர்ந்துள்ளது. புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

புயல் கரையை கடந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதற்கிடையே சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மரங்கள் சாலைகளின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.