அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
மாணவிக்கு முத்தம் கொடுத்த எச்.எம்; உள்ளாடையுடன் ஊர்வலம் நடத்திய உறவினர்கள்.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், எருமனூர் பகுதியில் பிரபலமான விஇடி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அங்குள்ள சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக எழில்பெல் பெலிக்ஸ் என்பவர் இங்கு பணியாற்றி வந்துள்ளார்.
கடலூரை சேர்ந்த தலைமை ஆசிரியர் பெலிக்ஸ், தன்னிடம் பயின்று வந்த மாணவி ஒருவருடன் பிடி அறையில் முத்தம் கொடுத்த காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின. இந்த அதிர்ச்சிக்காட்சிகள் அங்குள்ள வட்டாரத்தில் அதிகம் பகிரப்பட்டுள்ளன.
தலைமை ஆசிரியர் சிறைபிடிப்பு
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அங்குள்ள கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பாதிக்கப்பட்டது உறுதியாகவே, ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் சிறுமியின் உறவினர்கள் பள்ளி முடிவடையும் நேரத்தில் தலைமை ஆசிரியரை சிறைபிடித்தனர்.
இதையும் படிங்க: டீச்சர் செய்ற வேலையா இது?.. 15 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்த 22 வயது ஆசிரியை.!
தர்ம அடி, ஜட்டியுடன் இழுத்துச்செல்லப்பட்ட அவலம்
காரில் வீட்டிற்கு செல்ல காத்திருத்தவரை பிடித்து அடித்து நொறுக்கியவர்கள், உடலில் இருந்த ஆடையை கிழித்தெறிந்து அரைநிர்வாணப்படுத்தி அழைத்துச்சென்றனர். தகவல் அறிந்து வந்த விருத்தாச்சலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர், நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் மக்களிடம் இருந்து எச்.எம்-ஐ மீட்டனர்.
பின் அங்கிருந்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜட்டியுடன் இழுத்துச் செல்லப்பட்ட HM! தனிமையில் மாணவியுடன் PT ரூமில்.. வெளியான முக்கிய புகைப்படம்! pic.twitter.com/gGrCxllWYV
— Nakkheeran (@nakkheeranweb) August 8, 2024
வீடியோ நன்றி: நக்கீரன்
இதையும் படிங்க: பக்கவாட்டு கம்பியில் தொங்கியபடி பயணம்; போதை இளைஞரை ஊர்-ஊராக தேடி ஓட்டுநர்-நடத்துனர் செய்த அதிரடி சம்பவம்.!