தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கடலூர்: பழமையான ஐம்பொன் ஸ்ரீ திரௌபதி, கிருஷ்ணர், அர்ச்சுனன் சாமி சிலைகள் ஒப்படைப்பு.. கிராம மக்கள் நெகிழ்ச்சி செயல்.!
52 வருடங்களுக்கு முன்னதாக மற்றொரு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகளை, கோவில் அறங்காவலர் மற்றும் கிராம மக்கள் மீண்டும் கிராமத்தினரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம் கடலூர் அருகே நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை, பெரியமதகு கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் 200 வருடங்கள் பழமையான திரௌபதி, கிருஷ்ணன், அர்ச்சுனன் ஆகியோரின் 3 ஐம்பொன் சிலைகள் இருந்துள்ளன. இதனைப்போல, அங்குள்ள சாலக்கரையில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 52 வருடத்திற்கு முன்னதாக மேற்கூறிய ஸ்ரீ திரௌபதி, கிருஷ்ணன், அர்ச்சுனன் சாமி சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவை மீண்டும் பெரியமதகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலுக்கு மீண்டும் கொண்டு சொல்லப்படாத நிலையில், மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் சாமி சிலைகளை பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் திரௌபதி அம்மன் கோவிலில் குடமுழுக்கு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
அப்போது, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் சாமி சிலைகளை ஒப்படைக்க முடிவெடுத்த மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் திரு. ம. இராமச்சந்திரன் மற்றும் அவரின் குடும்பத்தினர் ஊர் மக்களிடம் தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். ஊர் மக்களும் அறங்காவலரின் முடிவுக்கு மனப்பூர்வ சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, 52 வருடங்களுக்கு முன்னர் சாலக்கரை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட ஸ்ரீ திரௌபதி, கிருஷ்ணர், அர்ச்சுனன் சாமி சிலைகள் மீண்டும் பெரியமதகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இதனால் பெரியமதகு மற்றும் சாலக்கரை மாரியம்மன் கோவில் தெருபொதுமக்கள் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சாமி சிலைகளை மீண்டும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலுக்கு வழியனுப்பி வைக்கும் போது, அறங்காவலரின் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் அனுப்பி வைத்து ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.