அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்ததால், 28 வயது இளைஞருக்கு நடந்த பயங்கரம்.. 2 நாட்கள் பரிதவித்து பறிபோன உயிர்.!

அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்ததால், 28 வயது இளைஞருக்கு நடந்த பயங்கரம்.. 2 நாட்கள் பரிதவித்து பறிபோன உயிர்.!


Cuddalore Man Died in Erode While He Consumption Alcohol Extra Large 

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் திருக்கேண்டேஸ்வரம் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவரின் மகன் வசந்த் (வயது 28). மது போதைக்கு அடிமையாக இருந்த வசந்த், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சீனாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

சம்பவத்தன்று இரவு பெருந்துறைக்கு சென்றவர், அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கி குடித்துள்ளார். அங்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடித்ததாக தெரியவரும் நிலையில், நடக்க இயலாமல் மயங்கி விழுந்த அவர் யாராலும் எழுப்பப்படாமல் இருந்துள்ளார். 

Cuddalore

இந்நிலையில் நேற்று முன்தினம் வரை சாலையின் ஓரத்திலேயே கிடைத்தவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் வசந்த் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வசந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடந்து வருகிறது. அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.