Crackers lorry burned
சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி மினி லாரி ஒன்றில் பட்டாசு ஏற்றி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது லாரி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வந்தபோது வாகனத்தில் ரேடியேட்டரில் இருந்து புகை கிளம்பியுள்ளது.
இதனை கண்ட டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி அருகில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் அப்பொழுது வாகனத்தில் பட்டாசு இருப்பதை அறிந்த அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட தொடங்கினர்.
ஆனால் கண்ணிமைக்கும் நொடியில் சிறிது நேரத்திலேயே பட்டாசு ஏற்றி சென்ற வாகனம் வெடித்து சிதறியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் லாரி அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்து போனது.
மேலும் வாகனத்தில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய அதிர்வால், அருகில் இருந்த கடைகள், வீடுகள் கண்ணாடிகள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்தது மேலும் முன்னே சென்றுகொண்டிருந்த பேருந்தின் கண்ணாடிகளும் வெடித்து சிதறியது. இதில் 9 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement