தமிழகம்

பைக்கில் நாட்டுப்பட்டாசு கொண்டு சென்ற தந்தை, மகனுக்கு கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த துயரம்! பகீர் சம்பவம்!!

Summary:

பைக்கில் நாட்டுப்பட்டாசு கொண்டு சென்ற தந்தை, மகனுக்கு கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த துயரம்! பகீர் சம்பவம்!!

புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்புப்பகுதியை சேர்ந்தவர் கலைநேசன். இவர் நாட்டு பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தீபாவளியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேட்டில், தாய் வீட்டில் இருந்த மனைவியை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது அவர் வண்டியின் முன்பக்கம் இரு சாக்கு மூட்டைகளில் நாட்டு பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

மேலும் அதன் மேல் தனது 7 வயது மகன் பிரதீசையும் அமர வைத்து சென்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனம் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிழக்குக்கடற்கரை சாலை சந்திப்பில் வந்துகொண்டிருக்கும்போது  எதிர்பாராதவிதமாக அந்த வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. அப்பொழுது நாட்டு பட்டாசுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதற துவங்கியுள்ளது.

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும் அப்பகுதியில் வந்த வாகனங்களும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement