43 வயதிலும் குறையாத அழகு! இளமையாக இருக்கும் நடிகை சினேகாவின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
பிரேக்கிங்: தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி.! மொத்த எண்ணிக்கை 969 ஆக உயர்வு.!

தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தலைமை செயலர் சண்முகம் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நேற்றுவரை 911 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று மேலும் 58 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்தம் 969 ஆக உயர்ந்துள்ளது.