பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
அச்சுறுத்தும் கொரோனா..! சென்னையில் மட்டும் இன்று 28 பேர் கொரோனாவுக்கு மரணம்.!

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழந்துள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் கடும் பீதியில் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது, தொடக்கத்தில் பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் குறைவாக இருந்தது மக்கள் மத்தியில் சற்று நம்பிக்கையை கொடுத்தது.
ஆனால், சமீப காலமாக கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அந்த வகையில், சென்னையில் மட்டும் இன்று 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
* ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர்
* ராஜூவ்காந்தி மருத்துவமனையில் 6 பேர்
* கேஎம்சியில் 5 பேர்,
* ஓமந்தூரார் மருத்துவமனையில் 6 பேர், தனியார் மருத்துவமனைகளில் 4 பேர் என, இன்றுமட்டும் சென்னையில் 28 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.