ஆக்ஸிஜனை பிடுங்கிட்டு போய்ட்டாங்களே.. மனைவி கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த கணவர்! நெஞ்சை கலங்க வைக்கும் வீடியோ!

ஆக்ஸிஜனை பிடுங்கிட்டு போய்ட்டாங்களே.. மனைவி கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த கணவர்! நெஞ்சை கலங்க வைக்கும் வீடியோ!


corono-dead-patient-complain-on-doctor

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு திட்டக்குடி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி கயல்விழி உடன் இருந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவர் வெண்டிலேட்டரை பிடுங்கிச் சென்றதால் ராஜா மூச்சு திணறி உயிரிழந்துள்ளதாக அவரது மனைவி கதறி அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் உயிரிழந்த நோயாளி ராஜாவின் மனைவி கூறியதாவது, கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு எனது கணவர் சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது மருத்துவர் ஒருவர் வந்து மற்றொரு நோயாளிக்கு வெண்டிலேட்டர் தேவைப்படுவதாக கூறி என் கணவருக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜனை எடுத்துச் செல்ல முயன்றார். நான் எவ்வளவோ தடுத்தும் அவர் எனது கணவரின் உடல்நிலையை சோதனைகூட செய்யாமல் ஆக்சிஜனை பிடுங்கி சென்று விட்டார்.

நான் வேண்டாம் என அந்த டாக்டரிடம் போராடினேன். ஆனால் அவர் என்னை தள்ளிவிட்டுவிட்டு எடுத்துச் சென்றுவிட்டார். பின்னர் எனது கணவர் மூச்சி விடமுடியாமல் திணறி துடிதுடித்து உயிரிழந்துவிட்டார். என் வாழ்க்கையே போச்சு. என் பிள்ளைகளை வைத்து என்ன செய்யப்போறேன் என கதறி அழுதுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் பரவி பார்ப்போரை கண்கலங்கவைத்துள்ளது. மேலும் பலரும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர்.