
Corono current update tamil nadu
தமிழகத்தில் இன்று மேலும் 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். நேற்றுவரை 411 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 485 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் இன்று புதிதாக 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அகில் 73 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்றுவந்தவர்கள் எனவும் கூறியுள்ளார்.
இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது. இதில், 422 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்றுவந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
தற்போதைய நிலவரப்படி (04-04-2020):
தமிழகத்தில் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை: 485
தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை: 3
தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை: 7
Advertisement
Advertisement