திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! என்ன காரணம்?

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! என்ன காரணம்?


Corona increased in thiruvallur district

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகமாக பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 6,535பேர் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்திலேயேசென்னையில் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளது.  நேற்று 4 பேர் பலியான நிலையில், இன்று ஒருவர் பலியாகி உள்ளார்.  இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

corona

தமிழகத்தில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மூலமாக கொரோனா பரவல் அதிகம் ஏற்பட்டது. தற்போது கோயம்பேடு மார்க்கெட் உடன் தொடர்புடையவர்கள் மூலமாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 120 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.  இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்தது.

தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் திருவள்ளூர் மாவட்டம் 3வது இடம் பிடித்து உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் பெருமளவில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது.