தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! உயிரிழப்பும் அதிகரிப்பு!



Corona increased in tamilnadu

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும்  கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால் சில தளர்வுகளுடன் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்திலும் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

corona

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 610 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.