தமிழகம் Covid-19

13 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு.! கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Summary:

13 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு.! கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி திக்குமுக்காட வைத்தது.  தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் 31,000-ஐ கடந்து சென்று மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இதனையடுத்து தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு போடப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாகவும் 31 ஆயிரத்துக்கும் மேல் சென்ற தினசரி பாதிப்பு மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது. இதனையடுத்து ஏராளமான தளர்வுகள் கொடுக்கப்பட்டன. 

இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 1,280 ஆக பதிவாகியுள்ளது. சென்னை, கோவை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 19 உயிரிழந்துள்ளனர். 


Advertisement