புதுக்கோட்டையில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு! நேற்று ஒருநாளில் மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுக்கோட்டையில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு! நேற்று ஒருநாளில் மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


corona increased in pudukkottai

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் ஆரம்பத்திலிருந்தே சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து, நீண்ட நாட்களாக புதுக்கோட்டை மாவட்டம் கொரோனா பாதிக்கப்படாத மாவட்டமாக இருந்தது. சுகாதாரத்துறையினர், கொரோனா தடுப்பு போராளிகள் தீவிரமாக செயல்பட்டனர். பொதுமக்களும் தங்கள் ஊருக்குள் வெளியில் இருந்து வரும் புதிய நபர்களை ஊருக்குள் விடாமலும் கட்டுக்கோப்பாக இருந்தனர்.

corona

பின்னர் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட பின்னர் பிற மாவட்டங்களில் இருந்து மக்கள் வரத்தொடங்கினர். இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலங்குடியில் இரண்டு இளம்பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இளம்பெண்கள் இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்ன கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிர் உயிரிழந்துள்ளார். இன்னும் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.