கள்ளக்காதலால் இரு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல்; அரிவாள் வெட்டில் முடிந்த பயங்கரம்...!!

கள்ளக்காதலால் இரு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல்; அரிவாள் வெட்டில் முடிந்த பயங்கரம்...!!


Conflict between two families due to counterfeiting; The horror of the sickle cut...!!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், அரிவாள் வெட்டு சம்பவத்தில்  15 பேருக்கு காயம் ஏற்பட்டது. 9 பேரை மதுரை மற்றும் திண்டுக்கல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மெய்யம்பட்டியில் வசிப்பவர் செல்லச்சாமி. இவரது மகன் சூரியபிரசாந்த் (22). இவர் டிப்ளமோ படித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் திருமணமானவரான சுகன்யா (38) என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுகன்யாவுடன் பழகுவதை தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூரிய பிரசாத் தன்னை திருமணம் செய்து கொள்ள சுகன்யாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தனது உறவினர்கள் சிலரிடம் இதுகுறித்து சுகன்யா கூறியுள்ளார். இரவு நேற்று இரவு மதுரையில் இருக்கும் தனது உறவினர்களை வரவழைத்து, சூரியபிரசாத் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.  

இதைத் தொடர்ந்து நத்தம் போலீசார் நேற்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்நிலையில் சுகன்யாவின் உறவினர்கள் இன்று அதிகாலை சூரிய பிரசாந்த் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றியதால், இரு தரப்பினரும்,  இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டை அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். 

இந்த இந்த மோதலில் காயமடைந்தவர்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.