எனக்கு வாழவே பிடிக்கலை.. தந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு கல்லூரி மாணவன் செய்த விபரீத காரியம்.! போலீசார் தீவிர விசாரணை.!

எனக்கு வாழவே பிடிக்கலை.. தந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு கல்லூரி மாணவன் செய்த விபரீத காரியம்.! போலீசார் தீவிர விசாரணை.!


college-student-commits-suicide-in-trichy

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் 20 வயது நிறைந்த அபிபோஸ்பான். இவர் திருச்சியில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேசன் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அபிபோஸ்பான் கடந்த இரண்டு மாதமாக திருச்சி, உய்யகொண்டான் திருமலை கணபதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனது நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளார். 

அவர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மனஅழுத்தத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனது அம்மாவிற்கு போன் செய்து பேசிய அவர் எனக்கு மனசு சரியில்லை என்று கூறியுள்ளார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து அந்த இளைஞன் தனது அப்பாவிற்கு, எனக்கு வாழவே பிடிக்கவில்லை. படிக்கவும் பிடிக்கலை. நான் சாகப்போகிறேன் என வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதனை கேட்டு பதறிப்போன அவரது தந்தை உடனே மகனின் நண்பருக்கு போன் செய்து தகவலை கூறி மகனின் அறைக்கு சென்று பார்க்க கூறியுள்ளார்.

college student

இதனை கேட்டு பதறிப்போன அவரது நண்பர்கள் அலறியடித்து ஓடி சென்று அறை கதவை திறந்து பார்த்துள்ளனர். அங்கு அபிபோஸ்பான் தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 20 வயது இளைஞனின் திடீர் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.