பள்ளி மாணவியை கற்பமாக்கிய கல்லூரி மாணவன்! மாணவி கொடுத்த ஐடியாவாள் ஏற்பட்ட விபரீதம்!
பள்ளி மாணவியை கற்பமாக்கிய கல்லூரி மாணவன்! மாணவி கொடுத்த ஐடியாவாள் ஏற்பட்ட விபரீதம்!

மதுரையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் 15 மகள் ஒருவர் நாமக்கல்லில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி படித்துவந்துள்ளார். பணக்கார தந்தையான மாணவியின் பெற்றோர் மாணவிக்கு 60 ஆயிரத்தில் தொலைபேசி வாங்கி கொடுத்துள்ளனர். அந்த தொலைபேசியில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கி தனது புகைப்படங்களை பதிவேற்றி வந்துள்ளார் மாணவி.
இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது அல்ஹசன் என்ற முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் ஒருவர் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரும் சில நாட்களில் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர் மாணவி மீது ஏற்பட்ட ஆசையில் அவரை தனது வலைக்குள் விழவைக்க திட்டமிட்டுள்ளார் அல்ஹசன்.
தான் நாமக்கல் வருவதாகவும், விடுதியில் இருந்து வெளியே வருமாறும் அல்ஹசன் கேட்டுள்ளார். தனது பெற்றோர் பெயரில் மின்னஞ்சல் அனுப்பினால்தான் தன்னை விடுதியில் இருந்து வெளியே விடுவார்கள் என்றும் அதுபோன்று மின்னஞ்சல் அனுப்புமாறும் ஐடியாவையும் அல்ஹசனுக்கு கொடுத்துள்ளார் மாணவி.
அவரும் மின்னஞ்சல் அனுப்பவே பள்ளி நிர்வாகம் மாணவிக்கு ஒருநாள் விடுமுறை கொடுத்து வெளியே அனுப்பியுள்ளது. இதனை அடுத்து தனது காதலனுடன் ஊர் சுற்றிய பிறகு இருவரும் லாட்ஜ் ஒன்றுக்கு சென்றுள்ளன்னர். அங்கு மாணவியை அல்ஹசன்பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை அடுத்து விடுதிக்கு வந்த மாணவி சில நாட்களில் வாந்தி எடுத்து, மயக்கம் போட்டுள்ளார். உடனே பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்ததை அடுத்து மாணவியை மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதித்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து மாணவியிடம் விசாரணை நடத்தி அல்ஹசனைக் கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.