#வீடியோ: உடம்பு சரியில்லாம லீவு கேட்டா இப்படியாடா பண்ணுவீங்க?.. கோவை கற்பகம் ஸ்பின்னிங் மில் கொடூரம்.. பதைபதைப்பு காட்சிகள்.!

#வீடியோ: உடம்பு சரியில்லாம லீவு கேட்டா இப்படியாடா பண்ணுவீங்க?.. கோவை கற்பகம் ஸ்பின்னிங் மில் கொடூரம்.. பதைபதைப்பு காட்சிகள்.!


coimbatore-saravanampatti-karpagam-spinning-mills-jhark

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வடமாநில பெண் தொழிலாளி வேலைக்கு வர மறுப்பு தெரிவிக்கவே, மில் தொழிலாளி, விடுதி வார்டன் அவரை தாக்கிய கொடூரம் நடந்துள்ளது. தற்போது பெண்ணை தாக்கிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கற்பகம் ஸ்பின்னிங் தனியார் நூற்பாலையில், ஜார்கண்ட் உட்பட பல வெளிமாநிலத்தை சார்ந்த ஆண்கள், பெண்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். இதே நூற்பாலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த 22 வயது பெண், தனது தோழிகளுடன் பணியாற்றி வந்துள்ளார். 

விடுதியில் இருந்த பெண்ணை ஆணொருவர் கம்பால் அடித்து மிரட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. இந்த வீடியோ குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், ஜார்கண்ட் பெண்ணிற்கு கடந்த 27 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ள பெண் கோரிக்கை வைத்த நிலையில், விடுதி வார்டன் லதா தொழிற்சாலை நிறுவன ஊழியர் முத்தையாவுக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார். இதன்பின்னர், இருவரும் சேர்ந்து பெண்ணை அழைத்து வேலைக்கு செல்ல கூறியுள்ளனர். பெண்மணி உடல்நிலை சரியில்லை என்று கூறவே, ஆத்திரமடைந்த விடுதி வார்டன் லதா மற்றும் ஊழியர் முத்தையா பெண்ணை தாக்கியுள்ளனர். 

அங்கிருந்த கம்பை எடுத்து பெண்ணை அடித்து கொடுமை செய்த நிலையில், பெண் வலி தாங்க இயலாது கதறி அழுதுள்ளார். இதனை விடுதியில் இருக்கும் பெண்மணியொருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடவே, வீடியோ பெரும் வைரலாகியுள்ளது. இதனையடுத்து, சரவணம்பட்டி காவல் துறையினர் நேரடியாக தொழிற்சாலைக்கு சென்று விசாரணை செய்துள்ளனர். 

Coimbatore

விசாரணையில், விடுதி வார்டன் லதா மற்றும் ஊழியர் முத்தையா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இரண்டு பேரையும் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநில பெண் குறித்து விசாரிக்கையில், அவர் சம்பவம் நடந்த மறுநாளே சொந்த ஊருக்கு சென்றுவிட்டது தெரியவந்தது.