நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
32 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தியில் அதிமுக பிரமுகர் தற்கொலை; கடிதத்தில் பகீர் தகவல்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர், அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் வேணுகோபால். இவரின் மகன் மாரிமுத்து (வயது 32). தற்போது வரை திருமணம் ஆகவில்லை. அதிமுக தொண்டாமுத்தூர் பேரூராட்சி 14வது வார்டு துணை செயலாளராக பொறுப்பில் இருந்து, தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6 மாதமாக இ-சேவை மையமும் நடத்தி வந்த நிலையில், மாரிமுத்து தனக்கு திருமணம் ஆகாதது குறித்து பெற்றோரிடம் கூறி புலம்பி இருக்கிறார். அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவின் பெற்றோர் தங்களின் மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
கடைக்கு சென்று மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்த மாரிமுத்து, திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் மாரிமுத்துவின் கடிதம் கைப்பற்றப்பட்ட நிலையில், அதில் "எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் எனக்காக தொந்தரவு செய்ய வேண்டாம்" என எழுதியுள்ளார். இதனால் அவர் கடன் பிரச்சனையில் இருந்தாரா?? என விசாரணையும் தொடர்ந்து வருகிறது.