எம்.எல்.ஏ பல்லவியின் பிஞ்சு குழந்தையை கையில் ஏந்தி தலையில் முத்தமிட்ட முதல்வர் விஜய்! சட்டசபையில் நடந்த அழகிய தருண காட்சி..!!!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் பரபரப்பான சூழலுக்கிடையே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ பல்லவியின் பிஞ்சுக் குழந்தை வெற்றிக்கொண்டானை பார்த்த முதலமைச்சர் விஜய், அவரைத் தூக்கி பாசமாக கொஞ்சி விளையாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
சட்டமன்ற வளாகத்தில் நடந்த இனிய தருணம்
சட்டமன்ற கூட்டத்தொடருக்காக வந்திருந்த பல்லவி, தனது மகன் வெற்றிக்கொண்டானையும் உடன் அழைத்து வந்திருந்தார். அப்போது வளாகத்தில் குழந்தையை கவனித்த முதலமைச்சர் விஜய், அருகே சென்று குழந்தையைத் தூக்கி அன்புடன் கொஞ்சி மகிழ்ந்தார். சில நிமிடங்கள் குழந்தையுடன் விளையாடிய அவர், அங்கிருந்தவர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
காணொளியாக வெளியான காட்சிகள்
இந்த தருணத்தை அங்கிருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்துள்ளனர். பின்னர் சமூக வலைதளங்களில் வெளியான அந்த வீடியோ, குறுகிய நேரத்திலேயே ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தையுடன் முதலமைச்சர் பழகும் விதம் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: முகம் முழுக்க சிரிப்பு! செங்கோட்டையன் பதவி ஏற்க வந்ததும் எழுந்து நின்ற விஜய், ராகுல் காந்தி! நெகிழ்ச்சி வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் வரவேற்பு
அரசியல் நிகழ்வுகள் மற்றும் விவாதங்கள் மையமாக இருக்கும் சூழலிலும், ஒரு தாயின் குழந்தை மீது காட்டப்பட்ட பாசமான அணுகுமுறை இணையவாசிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சட்டமன்ற வளாகத்தில் நிகழ்ந்த இந்த இனிய தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.
தவெக எம்எல்ஏ பல்லவியின் குழந்தையை கொஞ்சிய முதலமைச்சர் விஜய்#CMVijay #TVK #News18TamilNadu pic.twitter.com/Yu28GCR3Pp
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 22, 2026
இதையும் படிங்க: எம்எல்ஏ பல்லவியின் பிஞ்சு குழந்தையை கையில் ஏந்தியப்படி கொஞ்சிய ஆதவ் அர்ஜுனா! இருக்கை வரை வந்து பத்திரமாக பல்லவியிடம் கொடுத்த வீடியோ...!!!