எம்எல்ஏ பல்லவியின் பிஞ்சு குழந்தையை கையில் ஏந்தியப்படி கொஞ்சிய ஆதவ் அர்ஜுனா! இருக்கை வரை வந்து பத்திரமாக பல்லவியிடம் கொடுத்த வீடியோ...!!!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று படையை தொடங்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில், ஒரு சுவாரசிய தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேலும், முதலமைச்சர் விஜயின் தாயார் சோபா சந்திரசேகரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அன்பான செயல்
விழா நடைபெற்று கொண்டிருந்தபோது திருவிக நகர் எம்எல்ஏ பல்லவியின் கைக்குழந்தையை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தூக்கி கொஞ்சிய காட்சி அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. குழந்தையை கையில் ஏந்தியபடி வந்த அவர், பல்லவி தனது இருக்கையில் அமர்ந்த பிறகு குழந்தையை அவரிடம் ஒப்படைத்து அங்கிருந்து நகர்ந்தார்.
சமூக வலைதளங்களில் வைரல்
நிகழ்ச்சியில் பதிவான இந்த தருணம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரசியல் நிகழ்வுகளுக்கு நடுவே நடந்த இந்த எளிய சம்பவம் பலராலும் பகிரப்பட்டு பேசுபொருளாக மாறியுள்ளது.
எம்.எல்.ஏ பல்லவியின் கைக்குழந்தையை தூக்கி கொஞ்சிய அமைச்சர் ஆதவ்… இருக்கை வரை பத்திரமாக குழந்தையை தூக்கி வந்து பல்லவியிடம் கொடுத்த காட்சி..!#Chennai | #CMJosephVijay | #TVK | #MLS | #Singappen | #Pallavi | #PolimerNews pic.twitter.com/Y38NUXSw8Y
— Polimer News (@polimernews) June 9, 2026
இதையும் படிங்க: முகம் முழுக்க சிரிப்பு! செங்கோட்டையன் பதவி ஏற்க வந்ததும் எழுந்து நின்ற விஜய், ராகுல் காந்தி! நெகிழ்ச்சி வீடியோ..!!!