Video : குஷ்பூவின் மகள் திருமணத்தில் நடிகை திரிஷா! வேறு யாரெல்லாம் வந்திருக்காங்க தெரியுமா..?
அடி தூள்... 2 கி.மீ தூரம் வரை மாரத்தானில் மாஸ்ஸாக ஓடிய CM விஜய்! அனைத்து அதிகாரிகளும் ஓடியது தான் ஹைலைட்.... வைரல் வீடியோ..!!!
சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை தொடங்கிவிட்டு திரும்பிச் செல்லாமல், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து முழு தூரமும் ஓடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிய முதல்வர்
அண்ணா நினைவிடம் அருகே தொடங்கிய மாரத்தான் போட்டி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் நேரடியாக கலந்து கொண்டு ஓடினார். அவருடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பாதுகாப்பு அதிகாரிகள், தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் முழு தூரம் ஓடி விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றனர்.
அதிகாரிகளின் பங்கேற்பும் கவனம் ஈர்ப்பு
பொதுவாக இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் தொடக்க விழாவில் பங்கேற்று அதிகாரிகள் திரும்பிச் செல்வது வழக்கமாக இருக்கும். ஆனால் இந்த முறை முதல்வருடன் சேர்ந்து உயரதிகாரிகளும் மாரத்தானில் ஓடியது நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: எம்எல்ஏ பல்லவியின் பிஞ்சு குழந்தையை கையில் ஏந்தியப்படி கொஞ்சிய ஆதவ் அர்ஜுனா! இருக்கை வரை வந்து பத்திரமாக பல்லவியிடம் கொடுத்த வீடியோ...!!!
செல்பி எடுத்து மகிழ்ந்த பெண்கள்
மாரத்தான் நிறைவடைந்த பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்த முதல்வர் விஜயை, போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் உள்ளிட்ட பலர் சந்தித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பொதுமக்களுடன் இயல்பாக கலந்துரையாடிய இந்த தருணங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே பேசுபொருளாக அமைந்தன.
CM அண்ணா I Love You..!! போதைக்கு எதிரான போராட்டம் வருஷம் முழுக்க இருக்கும்.. இனி இளமையான, ஆரோக்கியமான தமிழ்நாடு உருவாகும்.. போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் முடிந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உற்சாக பேச்சு#Chennai | #CMJosephVijay | #AntiDrugDay | #SayNoToDrugs |… pic.twitter.com/ifzZWkw1uX
— Polimer News (@polimernews) June 26, 2026
மாரத்தான் போட்டிக்கு மத்தியில் குட்டி பிரேக் எடுத்த முதலமைச்சர் விஜயுடன் செல்ஃபி எடுத்து கொண்ட மாரத்தானில் பங்கேற்ற பெண்கள்.!#Chennai | #CMJosephVijay | #Marathon | #Selfie | #Women | #PolimerNews pic.twitter.com/umBynGrjtW
— Polimer News (@polimernews) June 26, 2026
இதையும் படிங்க: என்ன இப்படி சொல்லிட்டாரே.... தவெகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் அமைச்சர்! பரபரப்பு வீடியோ..!!!