BREAKING: இந்தியாவிலேயே இதுவே முதல்முறை... சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தில் முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!!
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். காவல்துறையின் புதிய முயற்சியாக அறிமுகமான இந்தத் திட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அதிரடிப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, இந்தப் படைக்கான பிரத்யேக இலச்சினையையும் அறிமுகப்படுத்தி திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: இதெல்லாம் யாருகிட்ட.... நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்! CM விஜய் போட்ட ரகசிய உத்தரவால் ஆடிப்போன அதிகாரிகள்.!!!
கம்பீர அணிவகுப்புடன் தொடங்கிய புதிய திட்டம்
ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக தேர்வு செய்யப்பட்ட பெண் காவலர்கள் அணிவகுப்பில் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினர்.
பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படை, அவசர சூழல்களில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரோன் ரோந்துப் பணிக்கு முதல்வர் அறிவிப்பு
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகக் கூறினார்.
அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக ட்ரோன் ரோந்துப் பணி அறிமுகப்படுத்தப்படும் என அவர் அறிவித்தார். மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் பாதுகாப்பு கவனம் தேவைப்படும் இடங்களில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதுடன், பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது. தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்படும் இந்த அதிரடிப்படை, மாநிலம் முழுவதும் கட்டம் கட்டமாக விரிவுபடுத்தப்படும் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.