பஸ்ஸில் ஒரு ரைடு போலாமாப்பா... வீடியோ எடுத்தபடியே பெரம்பூருக்கு பேருந்தில் கிளம்பிய CM விஜய்! இணையத்தை தெறிக்கவிடும் வீடியோக்கள் ..!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று 300 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு பேருந்தில் ஏறி நேரில் ஆய்வு செய்த அவரது செயல்பாடு கவனம் பெற்றதுடன், அதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
300 புதிய பேருந்துகள் சேவைக்கு அறிமுகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக இயக்கப்பட உள்ள அரசு பேருந்துகள் சேவையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதையடுத்து, புதிய பேருந்துகளை பார்வையிட்ட அவர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக விவசாயி மாநாட்டில் வள்ளி கும்மி நடனமாடி குத்தாட்டம் போட்ட குஷ்பூ! கலக்கல் வீடியோ வைரல்!
பேருந்தில் ஏறி ஆய்வு செய்த முதலமைச்சர்
அதன்பின் பெரம்பூர் செல்லும் பேருந்தில் ஏறிய முதலமைச்சர் விஜய், அதன் உள்பகுதியை ஆய்வு செய்தார். பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்ட அவர், தனது செல்போனில் அந்த தருணங்களை வீடியோவாக பதிவு செய்தார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சி
நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே முதலமைச்சர் பேருந்தில் ஆய்வு மேற்கொண்டு வீடியோ பதிவு செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
— Polimer News (@polimernews) June 25, 2026
#JUSTIN: ஒரு ரைடு போலாமாப்பா..! டிரைவர் மற்றும் ஓட்டுநருக்கு வாழ்த்து தெரிவித்த பின் புதிய பேருந்தில் பயணம் செய்த முதல்வர் விஜய்..! #CMVijay | #Vijay | #NewBuses | #PolimerNews pic.twitter.com/8tjzXRDYRm
— Polimer News (@polimernews) June 25, 2026
புதிதாக 300 பேருந்துகளின் சேவை தொடக்கி வைத்து பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்#Chennai | #CMJosephVijay | #GovtBus | #Travel | #PolimerNews pic.twitter.com/hv5RrlhGr3
— Polimer News (@polimernews) June 25, 2026
இதையும் படிங்க: எம்எல்ஏ பல்லவியின் பிஞ்சு குழந்தையை கையில் ஏந்தியப்படி கொஞ்சிய ஆதவ் அர்ஜுனா! இருக்கை வரை வந்து பத்திரமாக பல்லவியிடம் கொடுத்த வீடியோ...!!!