பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தை.! பேரதிர்ச்சியடைந்த பெற்றோர்.!

பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தை.! பேரதிர்ச்சியடைந்த பெற்றோர்.!


church-father-tortured-young-girl

சிவங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்ராபர்ட் (46). இவர் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியிலுள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருந்துவருகிறார். நேற்று முன்தினம் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

திருப்பலி முடிந்தபிறகு இவர் தேவாலயங்களுக்கு வந்த 3 சிறுமிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பி வந்த மூன்று சிறுமிகளும் தங்களின் பெற்றோர்களிடம் நடந்த விவரத்தைக் கூறி அழுதுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர், உடனடியாக ராமநாதபுரம் குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் குழந்அதைகள் நல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தேவாலயத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் புகார் கொடுத்த சிறுமிகளிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் பாதிரியார் ஜான் ராபர்ட் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள் காவல்துறையில்  புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு பாதிரியார் ஜான் ராபர்ட் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.