
பாலியல் தொல்லையால் சுதாரித்த பள்ளி மாணவி..!! பிரபல இயக்குநரின் மருமகன் கைது..!!
புதுச்சேரி முத்திரையர்பாளையத்தில் உள்ள இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சிக்காக 12 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி வந்துள்ளார். பயிற்சியின் போது , புதுச்சேரி சோரப்பட்டு கிராமத்தை சேர்ந்த பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை சற்றும் பொறுக்காத மாணவி, இதுபற்றி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இவர்கள் இதைப் பற்றி பெரிதாக எண்ணாமல், பிரச்சனை வேண்டாம் என்று கூறி ஒதுங்கியுள்ளனர்.
பின்னர், மனமுடைந்த அந்த மாணவி, புதுவை குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் அளித்தார். அதன்பின், குழந்தைகள் நலக்குழுவினர் இதைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவங்கள் உண்மை என தெரியவந்துள்ளது. பின்னர், இச் சம்பவம் பற்றி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தைகள் நலக்குழுவினர் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, பாலியல் புகாரின் பேரில் தாமரைக்கண்ணன், சினிமா இயக்குனர் ஷங்கரின் மருமகன் ரோஹிட் மற்றும் சம்பந்தியுமான தாமோதரன் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 5 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement