தமிழகம்

இளைஞரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கொடுமை செய்த 5 இளைஞர்கள்.. பேரதிர்ச்சி சம்பவத்தின் பகீர் வீடியோ.!

Summary:

இளைஞரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கொடுமை செய்த 5 இளைஞர்கள்.. பேரதிர்ச்சி சம்பவத்தின் பகீர் வீடியோ.!

வீட்டில் திருட வந்த இளைஞருக்கு கருணை மன்னிப்பு கொடுத்ததும் கேட்காததால், அவரை 5 பேர் சேர்ந்து தாக்கி கொலை முயற்சி வழக்கில் கைதான சம்பவம் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிளசிப்பூர் மாவட்டம், கோட்வாலி கிராமத்தை சேர்ந்தவர் மஹாவீர் சூர்யவன்ஷி. இவர் கூலித்தொழிலாளி ஆவார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சூர்யவன்ஷியை 15 வயது சிறுவன் உட்பட 4 இளைஞர்கள் மரத்தில் கட்டிவைத்து, தலைகீழாக தொங்கவிட்டு தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது. 

இந்த விடீயோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 15 வயது சிறுவன், மணீஷ் கரே, சிவராஜ் கரே மற்றும் ஜானு பார்கவ், பீம் கேசர்வானி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சூரியவன்ஷி கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மணீஷின் வீட்டில் திருட சென்றுள்ளார். 

இதனைகவனித்த மணீஷ் சூரியவன்ஷியை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், அவர் எழுத்துபூர்வமான புகார் அளிக்காத காரணத்தால், காவல் துறையினர் சூர்யவன்ஷியை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனை சாதகமாக எடுத்துக்கொண்ட சூர்யவன்ஷி, மீண்டும் மணீஷின் வீட்டிற்கு திருட சென்றுள்ளார். 

இதனையடுத்து, சூரியவன்ஷியை அப்படியே விட்டால் சரிப்படாது என எண்ணிய மணீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து சூரியவன்ஷியை பிடித்து மரத்தில் தலைகீழாக கட்டித்தொங்கவிட்டு கதற கதற அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த வீடீயோவை பதிவு செய்த கிராமவாசி இணையத்தில் வெளியிடவே அது வைரலாகி அனைவரும் சிக்கியுள்ளனர். 


Advertisement