தமிழகம் லைப் ஸ்டைல்

தினமும் சுடசுட சிக்கன் பிரியாணி செய்து தெரு நாய்களுக்கு ஊட்டிவிடும் பெண்..! சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Summary:

Chennai women gave biriyani to street dogs during lock down

கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் 21 நாட்கள் விதிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக உணவு கிடைக்காமல் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனிதர்களுக்கே இந்த கதினா அப்போ விலங்குகளுக்கு சொல்லவா வேண்டும். பெரும்பாலும் மக்களை நம்பி சாலை ஓரங்களில் திரியும் தெரு நாய்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் உணவு கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள், தன்னார்வலர்கள், சாதாரண மக்கள் என பலரும் பல இடங்களில் இதுபோன்ற உணவு தேவைகளை பூர்த்தி செய்துதான் வருகின்றனர்.

ஆனால், இவர்களை எல்லாம் ஒரு படி தாண்டி சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த சாந்தி என்பவர் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். அதாவது, தெருவில் உள்ள நாய்களுக்கும் தினமும் உணவு வழங்கி வருகிறார். அதுவும், காலையில் பிஸ்கட்டும், மாலையில் சிக்கன் பிரியாணியும் வழங்கி வருகிறார்.

நாய்களுக்கு உணவு வழங்குவது மட்டும் இல்லாமல் தினம் சுட சுட சிக்கன் பிரியாணி செய்து, அதனை குழந்தைக்கு தாய் உணவு ஊட்டி விடுவதுபோல அதை நாய்களுக்கு ஊட்டியும் விடுகிறார் சாந்தி. இவரின் இந்த செயல் பலரையும் வியப்படையவைத்துள்ளது.


Advertisement