சென்னை பெண் கார் ஏற்றிக்கொலை விவகாரம்.. இளைஞர் பரபரப்பு தகவல்.. நடந்தது என்ன? 



Chennai Woman Killed After Bar Brawl: Shocking New Details Emerge in Koyambedu Case

ஆசைக்கு இணங்காத பெண்ணை கார் ஏற்றிக் கொலை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் இளைஞர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. 

சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகில் தனியார் ஓட்டல் செயல்படுகிறது. இந்த ஓட்டலின் உரிமையாளர் டிராவல்ஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார். தவெக நிர்வாகி என கூறப்படுகிறது. ஓட்டலில் டிஜே இசையுடன் மதுபான பாரும் இருக்கிறது. இங்கு இரவு நேரங்களில் வசதியான இளைஞர்கள், காதல் ஜோடிகள் வந்து செல்வார்கள். அப்படி இளம்பெண்களுடன் போதையில் நடனமாடும்போது பாலியல் தொல்லை தொடர்பான பிரச்சனைகளும் எழுகின்றன. இந்த பிரச்சனையை தடுக்க பௌன்சர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

தோழிகள்:

இலங்கையில் வசித்து வந்த நகுலேஸ்வரன் இறுதிக்கட்ட போரின்போது தமிழகம் வந்தார். தற்போது விழுப்புரம் மாவட்டம் அனிச்சாங்குப்பம் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருக்கிறார். கூலி வேலை செய்து வரும் இவருக்கு யான்சி என்ற 18 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் கடலூரில் செயல்படும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்றுவிட்டு, சென்னையில் செயல்படும் கல்லூரியில் மேல்படிப்பு படிக்க விண்ணப்பித்து இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் பிரபலம் எனவும் கூறப்படுகிறது. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் நண்பர்களை நேரில் சந்திப்பது வழக்கம். மேலும், புதுச்சேரியில் இருக்கும் இன்ஸ்டா நண்பர்களுடன் இரவு விருந்து, ரிஸார்ட்டுக்கும் சென்று வந்துள்ளார்.

இதையும் படிங்க: வீட்டுக்குள் புகுந்து 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. சென்னையில் பேரதிர்ச்சி.!

chennai

மதுபோதை:

அந்த வகையில், இவர் கடலூரில் படித்தபோது, திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியில் வசித்து வந்த தாபிதாவுடன் பழகி இருக்கிறார். தாபிதாவின் தோழிகள் பவுசிகா, தீபிகா. பவுசியாவிடம் யான்சி நெருக்கமாக பழகி வந்துள்ளார். நண்பர்களாகவும் இருந்துள்ளனர். யான்சியின் வீட்டுக்கும் பவுசியா வந்து சென்றுள்ளார். இவர்கள் ஐவரும் சென்னை வந்து சந்தித்தும் பேசி இருக்கின்றனர். இதனிடையே, கடந்த 28ம் தேதி யான்சி, பவுசியா ஆகியோர் சினிமாவுக்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டுள்ளனர். பின் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரியவரும் நிலையில், பவுசியாவின் தாய் இருவரையும் கண்டித்து இருக்கிறார்.

இளைஞர் கும்பல்:

யான்சியையும் ஊருக்கு செல்ல அறிவுறுத்திய நிலையில், அவர் ஊருக்குச் செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட நிலையில், தாபிதாவின் வீட்டில் தங்கி இருக்கின்றனர். பின் இவர்கள் உட்பட 6 பேர், சம்பவத்தன்று தவெக நிர்வாகியின் ஓட்டலுக்கு இரவு 11 மணியளவில் ஒன்றாக சென்று மதுபானம் அருந்தியுள்ளனர். இந்த பாரில் அரும்பாக்கம் பகுதியில் வசித்து வந்த பாலகுரு (வயது 21), சூளைமேடு ஜோஷுவா (வயது 19), நெற்குன்றம் கிஷோர் குமார் (வயது 19), சுமன் சக்திவேல் உட்பட 7 பேர் ஒன்றாக மதுபானம் அருந்தி இருக்கின்றனர்.

chennai

உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தல்:

டிஜே இசையை ஒலிக்கவிட்டதும் யான்சி உட்பட தோழிகள் நடனமாடி இருக்கின்றனர். அப்போது, சுமன் சக்திவேல் மற்றும் பாலகுரு குழுவினர் சேர்ந்து பெண்களுடன் நடனமாடிவிட்டு, இன்று ஒருநாள் நைட் எங்களுடன் இருக்க முடியுமா? என கேட்டு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். இந்த விஷயத்துக்கு யான்சி, அவருடன் இருந்த 3 பேர் ஒப்புக்கொண்டதாக தெரியவருகிறது. பிற 3 பெண்கள் உல்லாசத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. சுமன் தரப்பு எங்களுடன் 6 பேரும் இருக்க வேண்டும், இல்லையென்றால் விடமாட்டோம் என கட்டாயப்படுத்தி இருக்கிறது. இதனால் தகராறு உண்டாகி 3 பெண்கள் வீட்டுக்கு புறப்பட்டு வெளியேறியுள்ளனர். 

கைகலப்பு & கடத்தல் முயற்சி:

சக்திவேல் தரப்பு பெண்களின் கையைப்பிடித்து இழுத்து, கட்டியணைத்து தப்பித்து போக கூடாது என வம்பிழுத்து வாக்குவாதம் செய்துள்ளது. இதனால் இருதரப்பிலும் பிரச்சனை உண்டாகி இருக்கிறது. யான்சி ஒருகட்டத்தில் பாலகுரு, அவர்களின் தோழர்களை செருப்பால் அடித்து இருக்கிறார். இதனை பாருக்குள் கைகலப்பு உண்டாகி, பவுன்சர்கள் குறுக்கிட்டு அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி இருக்கின்றனர். யான்சி இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றபோது, பாலகுரு தரப்பு பணம் தருவதாகவும், உல்லாசம் வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி காரில் ஏற்ற முயற்சித்துள்ளது.

chennai

கொலை சம்பவம்:

மீண்டும் அங்கு இருதரப்பு சண்டை உண்டாகிய நிலையில், பவுன்சர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். போதையில் இருந்த யான்சி, 17 வயது தோழி தீபிகா ஒரு ஸ்கூட்டரில், பவுசியா, தாபிதா என 4 பேர் மற்றொரு வாகனத்திலும் புறப்பட்டுள்ளனர். இவர்கள் தாபிதாவின் வீட்டுக்கு சென்றபோது, காரில் வந்த பாலகுரு தரப்பு இவர்களை விரட்டி இருக்கிறது. காரின் மீது யாமினி கற்களை வீச, எதிர்தரப்பு யான்சி, தீபிகா பயணித்த காரில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இருவரும் படுகாயம் அடைத்தனர். ஆத்திரம் தீராத கும்பல் மீண்டும் மோதிவிட்டு தப்பிச் சென்றது என கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் காவல் துறையினர் 3 பேரை கைது செய்திருந்தனர்.

புதிய திருப்பம் உண்மை என்ன?

இந்நிலையில், யான்சி கொலை வழக்கு தொடர்பான விவகாரத்தில் அஷ்ரத் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "எனக்கு மதுப்பழக்கம் இல்லை. பாரில் யான்சி, பவுசியா மதுபானம் அருந்தி இருந்தனர். யான்சி மேடையில் நடனமாடிக்கொண்டு இருந்தார். ஒரு கும்பல் அவரிடம் தவறான முறையில் நடந்துகொண்டு வம்பிழுத்தது. அவரின் இடுப்பை பிடித்து கிள்ளி, தங்களுடன் வரவேண்டும் என வற்புறுத்தியது. இதுதொடர்பாக யாஷினி என்னிடம் கூறினார். நான் உடனடியாக மேடைக்குச் சென்று அவர்களை கண்டித்து இருந்தேன். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் என்னை யார்? என்று கேட்டு முகத்தில் குத்தி சண்டை செய்தது. பவுன்சர்கள் வந்து பிரச்சனை வேண்டாம் என அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டனர்.

chennai

எங்களிடம் ஒரேயொரு இருசக்கர வாகனம் இருந்ததால் யான்சி, பவுசியா உட்பட 4 பேர் புறப்பட்டு பயணம் செய்தோம். கோயம்பேடு மேம்பாலத்தை நாங்கள் கடக்கும்போது சொகுசு காரில் வந்த கும்பல் எண்களின் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றது. கீழே விழுந்ததில் யான்சியின் மண்டை உடைந்து அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்" என கூறி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது. மேலும், தலைமறைவாக இருக்கும் நபர்களுக்கு அதிகாரிகள் தொடர்ந்து வலைவீசி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: தவெக நிர்வாகி பாரில் பயங்கரம்.. உல்லாசத்துக்கு மறுத்த 18 வயது பெண் துள்ளத்துடிக்க கொலை.. சென்னையில் துணிகரம்.!