புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
காதல் திருமணம் நடந்த 7 ஆண்டுகளில் துயரம்: பலபெண்களுடன் கணவன் நெருக்கம்; மனைவி விபரீதம்..!
ஆசை ஆசையாக காதலித்த நபர் துரோகம் செய்துவிட்டதை எண்ணி பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை, முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் நம்பிராஜன். இவரின் மனைவி நவீனா. தம்பதிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள் ஆவார்கள்.
இதையும் படிங்க: சென்னை: வைகை எக்ஸ்பிரஸ் இரயில் - நடைமேடை இடையே சிக்கி துள்ளத்துடிக்க உயிரிழந்த இளைஞர்; பதறவைக்கும் காட்சிகள்.!
இதனிடையே, கணவரின் செயல்பாடுகளில் இருந்த மாற்றத்தை அடுத்து, மனைவி கணவரின் பின்புலத்தை ஆராய்ந்துள்ளார். அப்போது, காதல் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது நவீனாவுக்கு தெரியவந்துள்ளது.
நவீனா தற்கொலை
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்தும், காதல் கணவன் இப்படி இருக்கிறாரே என நவீனா மனவேதனை அடைந்துள்ளார். இருவருக்கும் இதுதொடர்பாக வாக்குவாதமும் நடந்துள்ளது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த நவீனா தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நவீனாவின் தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணையும் நடந்து வருகிறது. நம்பி ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் 40 ஆண்டுகளுக்கு பின் அசைவ உணவுகள் நோயாளிகளுக்கு விநியோகம்.!