உல்லாசத்திற்கு வராத கள்ளக்காதலியின் பெற்றோர் துள்ளத்துடிக்க கொலை.. 2 நாட்கள் இரத்த வெள்ளத்துடன் துடிதுடித்து பலியான பரிதாபம்.!

உல்லாசத்திற்கு வராத கள்ளக்காதலியின் பெற்றோர் துள்ளத்துடிக்க கொலை.. 2 நாட்கள் இரத்த வெள்ளத்துடன் துடிதுடித்து பலியான பரிதாபம்.!


Chennai Tambaram Couple Killed by Man Whom Affair With Daughter

 

தனது ஆசை கள்ளக்காதலி தன்னோடு உல்லாசமாக இருக்க வராததால், ஆத்திரமடைந்த கயவன் கள்ளகாதலியின் பெற்றோரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள தாம்பரம், ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 50). இவர் பூ வியாபாரியாக இருக்கிறார். ஆறுமுகத்தின் மனைவி மஞ்சுளா (வயது 45). இவர்களுக்கு ராஜேஷ் என்ற மகனும், வசந்தி, முழு என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தங்களின் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்கள். 

இதற்கிடையில், வசந்திக்கும், அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு மகன், மகள் இருக்கின்றனர். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக வசந்தி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். ஆறுமுகத்தின் மகள் அமுலு மாங்காட்டில் கணவரோடு வசித்து வருகிறார். ராஜேஷ் தனது மனைவியுடன் ஜமீன் ராயப்பேட்டையில் தனியாக வசித்து வருகிறார்.

இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாக வசந்திக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் மோசஸ் (வயது 35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்குள்ளும் கள்ளக்காதலாக மாறவே, ஆறுமுகத்தின் வீட்டிலேயே கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இந்த தகவல் வசந்தியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் மகளை கண்டித்து இருக்கின்றனர். 

chennai

மேலும், கள்ளக்காதலிக்கு மதுபானம் அருந்தும் பழக்கத்தையும் கற்பித்த நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து போதையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்து வந்துள்ளது. மதுபோதையில் மோசஸ் வசந்தியை துன்புறுத்தவே, ஒருகட்டத்தில் தனது குழந்தையுடன் வசந்தி சகோதரி அமுலுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அன்றைய நாளின் இரவில் வசந்திக்கு தொடர்பு கொண்ட கள்ளக்காதலன் மோசஸ், நீ வீட்டிற்கு வராத பட்சத்தில் பெற்றோரை உனது பெற்றோரை கொலை செய்திடுவேன் என்று மிரட்டி இருக்கிறான். வசந்தி அதனை கண்டுகொள்ளாத நிலையில், வசந்தியின் பெற்றோரை மோசஸ் தனது வீட்டிற்கு அழைத்து சென்று இருக்கிறார். அங்கு மூவரும் சேர்ந்து மதுபானம் அருந்தி இருக்கின்றனர். 

chennai

இதற்கிடையில், வசந்தி தனது பெற்றோருக்கு 2 நாட்களாக போனில் தொடர்பு கொண்டும் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து சகோதரர் ராஜேஷை வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் நேரில் சென்று பார்த்தபோது மோசஸின் வீடு பூட்டி கிடந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஆறுமுகம் - மஞ்சுளா தலை, கழுத்து, முகம், தொடை போன்ற பகுதிகளில் பலத்த வெட்டுக்காயத்துடன் பிணமாக இருந்தனர். 

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தலைமறைவான மோசஸை தேடி வருகின்றனர். மேலும், அவர் மஞ்சுளா - ஆறுமுகத்தை தனது வீட்டிற்கு அழைத்து வருவதும், பின்னர் மற்றொரு நபருடன் தப்பி செல்வதும் அங்குள்ள சி.சி.டி.வி கேமிரா காட்சிகளில் இடம்பெற்றுள்ளது. இதனால் கள்ளக்காதலி தன்னுடன் உல்லாசமாக இருக்க வராத காரணத்தால், அவரின் பெற்றோரை கொலை செய்தது அம்பலமானது.