#Breaking: இரவு 7 மணிவரை கீழ்காணும் மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழ்நாட்டில் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம். தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். வரும் 3 நாட்களுக்கு மீனவர்கள் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு (இரவு 07:00 மணிவரை) நீலகிரி, கோயம்புத்தூர், அரியலூர், கடலூர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளன என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.